8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
ஊ சொல்றியா மாமா பாடலால் நேர்ந்த விபரீதம்.! தீ பற்றி எரிந்த செல்போன் கடை.! பரபரப்பு சம்பவம்!!
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் இடம்பெற்று பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து பயங்கர ட்ரெண்டான பாடல் ஊ சொல்றியா மாமா. ஆண்ட்ரியாவின் வசீகர குரலில், சமந்தாவின் கவர்ச்சியான ஆட்டத்துடன் வெளிவந்த இப்பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்நிலையில் இப்பாடலால் மதுரையில் கடை ஒன்று சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூர் அய்யனார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது சலீம் என்பவர் ஒரு வருடத்திற்கு முன்பு அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் சென்ற அவர் நேற்று தான் ஏற்கனவே வேலை பார்த்த உணவகத்திற்கு எதார்த்தமாக வந்துள்ளார். அந்த உணவகத்திற்கு அருகே முகம்மது அபி என்பவரின் செல்போன் கடை ஒன்று இயங்கி வருகிறது.
அங்கு ஊ சொல்றியா மாமா பாடல் ஒலித்துக் கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் போதையில் இருந்த இருந்த சலீம் தான் டான்ஸ் ஆட வேண்டும் என கூறி பாடலை மிகவும் சத்தமாக வைக்க கூறியுள்ளார். மேலும் சத்தம் வைக்கவில்லை என்றால் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அவர் மது போதையில் இருந்ததால் செல்போன் கடை ஊழியர் அவர் கூறுவதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் டென்ஷனான முகமது சலீம் சிறிது நேரத்தில் கையில் பெட்ரோல் குண்டுடன் வந்து அருகில் இருந்த உணவகத்தில் பற்றவைத்து செல்போன் கடை மீது அதனை தூக்கி வீசியுள்ளார். இதில் செல்போன் கடையின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கடையின் உள்ளே இருந்த ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனே இதுகுறித்து கடை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் முகம்மது சலீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.