மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்! வித்தியாசமான தண்டனை குடுத்த நீதிபதி! என்ன தண்டனை தெரியுமா?



Youngster arrested for argue with traffic police

நாகரிக வளர்ச்சிக்கேற்ப மனிதர்களின் அன்றாட வாழக்கை முறைகளும் பலவிதங்களில் மாறிக்கொண்டே வருகிறது. அதில் ஒன்றுதான் மது அருந்துதல். மது அருந்தாத இளைஞர்களை காண்பதென்பது மிகவும் அரிதாகிவிட்டது.

இந்நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மது அருந்தி விட்டு போக்குவரத்துக்கு காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு தாகராறில் ஈடுபட  இளைஞருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை வழங்கினார்.

Traffic police

கோவையில் மது போதையில்வாகனம் ஒட்டிவந்து போலீசாருடன் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அந்த இளைஞருக்கு மிகவும் வித்தியாசமான தண்டனையை நீதிபதி வழங்கினார்.

அதன்படி தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த இளைஞர் போக்குவரத்துகாவலருக்கு உதவியாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கோவைநீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதி உத்தரவிட்டார். அந்த இளைஞரும் கண்ணும் கருத்துமாகஅந்த தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.