#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
சென்னை: பிஐஎஸ் முத்திரை இல்லாத பொருட்கள் விற்பனை? அமேசான், பிளிப்கார்ட் குடோனில் ரூ.36 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுவயல், கொடுவள்ளி பகுதியில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிரம்மாண்ட அளவிலான குடோன்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநில அளவில் பல்வேறு பொருட்கள் டெலிவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆன்லைன் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் என்ற அடிப்படையில், இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணயத்தின் பேரில் உள்ள, அனுமதி பெறப்பட்ட பொருட்களை அவர்கள் விற்பனை செய்ய அனுமதி இருக்கிறது.
சோதனையில் அனுமதியில்லாத பொருட்கள் சிக்கியதால் அபாரதம்
இதனிடையே, பிஐஎஸ் தரசான்றிதழ் இல்லாத தண்ணீர் குடுவை, உணவு கொள்கலன், குடிநீர் பாட்டில், தண்ணீர் சூடேற்றி, சீலிங் பேன், குழந்தைகள் விளையாடும் பொம்மை உட்பட பல்வேறு பொருட்கள் இருப்பதாக புகார் எழுந்தது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை: மோட்டோரோலா போன் புக் செய்தவருக்கு டவ் சோப் டெலிவரி.. பிளிப்கார்ட் ஆர்டர் பரிதாபங்கள்..!
இதனால் அரசுத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தபோது, அவை உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மொத்தமாக ரூ.36 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; நேரில் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டால்பின்கள்.. வைரல் வீடியோ.!