96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய பிரபல ஐடி நிறுவனம் முடிவு! அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!
பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பத்தாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனமும் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனம் செலவினங்களை குறைத்து வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
உயர் பதவிகள் மற்றும் நடுத்தர பதவிகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் பணித்திறன் அடிப்படையில் இந்த பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
தகுதி மற்றும் பணித்திறன் அடிப்படையில் 3 மாதங்களில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம். சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் 2200 பேர் வேலை இழக்கின்றனர்.