96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மேலும் ஒருவருடம் இலவசம்! உடனே படிங்க!
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். பலவருடமாக ஆதிக்கம் செலுத்திவந்த பல்வேறு நிறுவனங்கள் ஜியோவின் வளர்ச்சியால் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.
ஜியோவின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் ஜியோவின் இலவச சேவைதான் காரணம். ஆரம்பத்தில் அனைத்தையும் இலவசமாக வழங்கிய ஜியோ நிறுவனம் தற்போது பல்வேறு சேவைகளுக்கு குறைந்த கட்டணத்தையே வசூலித்து வருகிறது.
குறிப்பாக ப்ரைம் கஸ்டமர் என கூறப்படும் ஒரு வருடத்திற்கான சந்தாவாக 99 ரூபாயை வசூலித்து அதற்கென பல்வேறு சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் மீண்டும் அடுத்த வருடத்திற்கு ப்ரைம் கஸ்டமராக நீடிக்க 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யாமலையே மீட்டும் ஒருவருடம் இலவசமாக மாற்றியுள்ளது ஜியோ நிறுவனம்.
இதன்மூலம் நீங்கள் மேலும் ஒரு வருடத்திற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யாமலே ப்ரைம் வாடிக்கையாளராக தொடரலாம்.