3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
புத்தாண்டுக்காக ஜியோ நிறுவனம் அறிவித்த அதிரடி ஆஃபர்!. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள்!.
2016-ம் ஆண்டு ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் நடைமுறைக்கு வந்தது. ஜியோ வந்த பிறகு சில தொலைத்தொடர்பு நிறுவனம் காணாமல் போனது. ஜியோ வந்த பிறகுதான் அணைத்து தொலைத்தொடர்பு நிறுவங்களும் கட்டண விலையை குறைக்க தொடங்கியது.
ஜியோ நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுக்குள்ளேயே, அசத்தல் ஆஃபர் போன்றவற்றை வழங்கி தற்போது அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.
ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்பட்டு 25 மாதங்களுக்குள் 2.5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று, கடந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் 681 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு 2017 புத்தாண்டு ஆஃபராக, ஜியோ 100 % கேஷ்பேக் ஆஃபர் அளித்தது. அந்த ஆஃபர், ஜியோ வாடிக்கையாளர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றது.
அதே ஆஃப்ரை இந்த ஆண்டும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று மாத கால மதிப்பைக் கொண்ட 399 ரூபாய் பேக்-ஐ, ரிசார்ஜ் செய்யும்போது அந்த முழு பணமும் ஜியோ மைகூப்பனில் கிரெடிட் ஆகிவிடும்.
அந்த 399 ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆஃபர் டிசம்பர் 28-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.