குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் எது தெரியுமா?
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த உலகில் அணைத்து விஷயங்களையும் இருந்த இடத்தில் இருந்துகொண்டே தெரிந்துகொள்ளும் வசதி இன்று அனைவரிடத்திலும் உள்ளது. தகவல்களை நமக்கு தெரிவிக்க மிக முக்கிய பங்கு வகிப்பது கூகிள் தேடல். கையில் செல்போன் வைத்திருக்கும் அனைவரும் கூகுளைப் பயன்படுத்தி அவர்களுக்கு வேண்டியதைத் தெரிந்து கொள்கிறார்கள்.
வளர்ந்துவரும் இந்த தொழில்நுட்ப உலகில் கூகுளை பயன்படுத்தாவர்களே கிடையாது என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு அனைவர் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கூகிள்.
இந்நிலையில் 2019ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்ற பட்டியலை கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அதிகம் தேடபட்ட டாப் 10 வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் இதோ.
10 .PM Kisan Yojana
9 . Captain Marvel (ஆங்கில திரைப்படம்)
8 . Jocker (ஆங்கில திரைப்படம்)
7 . NEET results
6 . Article 370 (காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து)
5 . Avengers End Game (ஆங்கில திரைப்படம்)
4 . Kabir Singh (தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் வெளியான திரைப்படம் இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் வெளியானது.)
3 . Chandrayaan 2
2 . Lok Sabha Elections
1 . Cricket World Cup