#Breaking: மாநில அரசை திட்டமிட்டு வஞ்சிக்கும் மத்திய அரசு? "ஒன்றிணைவோம் வா" - இந்த முறை வேற ரூட்டில்... முதல்வர் முக ஸ்டாலின்.!



TN CM MK Stalin 21 March 2025 Video on Parliament Constituency 


மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்து போராடி வருகிறது. நாடாளுமன்ற வளாகம், மாநில அளவிலும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாளை 7 மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதனைமுன்னிட்டு இன்று முதல்வர் & திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவர்க்கும் வணக்கம். திமுக ஏன் நாடாளுமன்ற மக்களவை தொகுதி பங்கீடு விஷயத்தில் இவ்வுளவு போராடுகிறது என்றால், தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் இருந்தால், நமது எம்.பி எண்ணிக்கை பாதிக்கப்படும். இது நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை. அதனாலேயே தமிழ்நாட்டில் மாநில அளவிலான அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. 

ஓரணியில் திரள்வோம்

பாஜக தவிர பிற அனைத்து கட்சியும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறுசீரமைப்பு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு காரணமாக பாதிக்கப்படும் பிற மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும், பிற கட்சிகளுக்கும் கடிதம் எழுதினேன். அவர்களை மாநில அமைச்சர், எம்.பி தலைமையிலான குழு சந்தித்து விவரித்து கடிதம் வழங்கினர். 

இதையும் படிங்க: மக்கள் பிரச்சனையை பேச அனுமதி மறுப்பு? திமுக அரசு மீது எடப்பாடி குற்றசாட்டு.!

MK Stalin

உரிமைகள் நசுக்கப்படும்

முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்கள் பாதிக்கப்பட்டால், இந்தியாவில் கூட்டாட்சி பொருள் இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பு இருக்காது. நாடாளுமன்றத்தில் நமது குரல் நசுக்கப்படும். உரிமைகள் நிலைநாட்ட முடியாது. 

இந்தியாவை காக்கும் திமுக

இது மாநிலத்தை அவமதிக்கும் செயல். ஆதலால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, ஒன்றிய அரசுக்கு சிறப்பாக செயல்பட்டு ஊக்குவித்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு தண்டனை கொடுக்க கூடாது. அதனாலேயே பிற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்ட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்" என தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: #Breaking: தூத்துக்குடி, சாத்தான்குளம் நினைவிருக்கா? - கேள்வி கேட்டதும் வெளியே வந்த அதிமுக..!