ஆண்களை விட பெண்களுக்கே ஆயுள் காலம் அதிகம்; காரணம் என்ன? ஆய்வில் வெளிவந்த உண்மை.!

உலகளவில் வாழும் பெண்களின் உழைப்பை போற்றும் வகையில், நேற்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனிடையே, ஆய்வு ஒன்றில் பெண்கள் ஆண்களை விட அதிகம் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் பெண்கள் ஆழம் காலம் 80 ஆண்டுகளாகவும், ஆண்கள் வாழும் காலம் 75 ஆண்டுகளாகவும் இருக்கிறது. ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழுகின்றனர். இதையும் படிங்க: 160 கிமீ வேகத்தில் வெளியேறும் தும்மல்.. அசத்தல் தகவல் இங்கே.!
புகை-மது பழக்கம் இல்லாமல் இருந்தால் ஆயுள் நீட்டிப்பு
அங்குள்ள சான் பிரான்சிசுகோ நகரில் செயல்பட்டு வரும் கலிபோர்னியா பல்கலை., பேராசிரியை மேற்கொண்ட ஆய்வில், இயற்கையாக ஆண்களை விட பெண்களே அதிகம் வாழுகின்றனர் என்பதை உறுதி செய்துள்ளார்.
அவர்களின் வாழ்நாள் அதிகரிக்க மரபணு மாற்றம், ஹார்மோன் சுழற்சி, வாழ்க்கை முறை உட்பட பல விஷயங்கள் காரணமாக அமைகிறது. ஆண்களின் உயிரிழப்புக்கு புகை, மது போன்ற பழக்கம் காரணமாக அமைகிறது. இதனால் ஆண்களின் வாழ்நாள் வெகுவாக குறைந்து வருகிறது.
இதையும் படிங்க: அன்றாடம் ஏசி பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி.! இவ்வளவு ஆபத்துகளா.?!