#Breaking: தமிழ்நாடு முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து; உபி முதல்வருக்கு பதிலடி கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்.! என்ன சொன்னார் தெரியுமா?



TN CM MK Stalin on UP CM Yogi Statement 

 

மொழித்திணிப்பு, ஆதிக்கம் போன்றவற்றையே நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் எம்மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை என முதல்வர் கூறியுள்ளார்.

உபி முதல்வர் பேச்சு

"மொழி அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மக்களிடையே பிரிவினையை தூண்டுகிறார்" என சமீபத்தில் உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இந்த விஷயம் திமுகவினர் இடையே பெரும் கண்டனத்தை எழுப்பியது. மேலும், தேசிய அளவிலும் கவனிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: #Breaking: சர்ச்சை பேச்சு.. லீக்கான வீடியோ.. திமுக மா.செ பதவி பறிப்பு.. அதிரடி காட்டிய திமுக தலைமை.!

அதிமுக-பாஜக இணையும் சூழல்?

ஏற்கனவே மாநிலத்தில் பாஜக - திமுக இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது. எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் அங்கீகாரத்தை பெற, அவர்களிடம் சென்றுசேர பாஜக தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. இதுவரை எதிரெதிர் துருவம் போல விமர்சித்து வந்த அதிமுக தலைமை, தேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வந்திருக்கிறது.

முக ஸ்டாலின் பதிலடி

இந்நிலையில், உபி முதல்வர் யோகியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் வலைப்பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எந்த மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. மொழித்திணிப்பு மற்றும் அதன்பேரில் நடக்கும் ஆதிக்கத்தை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இருமொழி கொள்கைக்காக தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக போராடி இருக்கிறது. வாக்குவங்கி அரசியலுக்காக நாங்கள் ஏதும் பேசவில்லை. இது நீதிக்கான போராட்டம். கண்ணியமான முறையில் அவை எதிரிகொள்ளப்படுகிறது. 

இதையும் படிங்க: #Breaking: நாவடக்கம் தேவை.. நீங்கள் மன்னனா? - மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் சரமாரி கண்டனம்.!