அதிர்ச்சி! ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையால் கலக்கத்தில் உலக நாடுகள்



2018-is-the-4th-warmest-year-by-un

அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 4வது இடத்தை பிடித்துள்ளது. ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கலிபோர்னியா, கிரீஸில் ஏற்பட்ட காட்டுத்தீ, தென் ஆப்பிரிக்காவின் வறட்சி மற்றும் கேரளாவின் வெள்ளப்பெருக்கு ஆகியவை இந்த உலக வெப்பமயமாதலால் தான் நிகழ்ந்துள்ளன என ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

2018

1880 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படும் உலக வெப்பநிலையில் கடந்த 4 வருடங்கள் தான் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. 2016 முதலிடத்திலும், 2017 இரண்டாமிடத்திலும், 2015 மூன்றாவது மற்றும் 2018 நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. 

பசுமையில்லா வாயுக்கள் அதிகமாக வெளியிடப்படுவதே இந்த வெப்பமயமாதலுக்கு காரணம் எனவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியசுக்கு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது. 

2018

வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் முனைப்பு காட்டவில்லை என்றால் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.