96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நடுவானில் விமான பெண் பயணி பலாத்காரம்.. இளைஞர் துணிகர செயல்.!
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் பயணியை ஆணொருவர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இலண்டன் நோக்கி சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண்மணியொருவர் பயணம் செய்துள்ளார். இவருடன் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஆண் பயணித்துள்ளார்.
விமானம் நடுவானில் சென்றுகொண்டு இருக்கும் போது, பெண் அயர்ந்து உறங்கியுள்ளார். அப்போது, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பயணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி இலண்டனில் ஹீத்ரோ விமான நிலைய காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாலியல் பலாத்காரம் செய்தவர் விமான நிலையத்தில் இருந்து உடனடியாக வெளியேறி சென்றதால், அவரை தேடி வருகின்றனர். அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.