குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நீங்கள் இலவசமாக கொடுத்தாலும் வேண்டாம்! இது என்னடா கோழிக்கறிக்கு வந்த சோதனை..! கொரோனா அச்சத்தால் முதலீட்டாளர்களுக்கு வந்த சோதனை!
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆந்திர மாநிலம் நகரி அருகே கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் கோழிக்கறியை இலவசமாக கொடுத்தாலும் வாங்க மறுத்துள்ளனர். மேலும் தற்போது ஆந்திராவில் கோழிக்கறி கிலோ 30 மற்றும் 40 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது.
இருப்பினும் அந்த விலைக்கு கூட வாங்க யாரும் வராததால் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் குவ்வலகுமார் ரெட்டி என்ற கோழிப்பண்ணை உரிமையாளர் சுமார் 2000 கோழிகளை அருகில் உள்ள கிராமத்தினருக்கு இலவசமாக வழங்க கொண்டு சென்றார்.
ஆனால் மக்கள் அதனை வாங்க மறுத்துள்ளனர். இதனால் அந்த கோழிகளை என்ன செய்வது என்று தெரியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.