3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
வெளியே தெரிந்த மனித கைகள்.. விடாமல் குறைத்த நாய்கள்.. சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
பனி புதையலில் சிக்கிக்கொண்டிருந்த இருவரை காப்பாற்ற நாய்கள் போராடிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் செல்ல பிராணிகளில் ஒன்று நாய். பல நேரங்களில் நாய்கள் மனிதர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துவருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஒருபகுதியில் மக்கள் சிலர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இரண்டு நாய்கள் விடமால் குறைப்பதை கண்டுள்ளனர். நாய்களின் சத்தம் அந்த மக்களை ஈர்க்கவே, சரி அங்கு என்னதான் உள்ளது என்று பார்ப்பதற்காக சிலர் நாய் குறைக்கும் சத்தம் வரும் பகுதியை நோக்கி சென்றுள்ளனர்.
அங்கு சென்று பார்த்தபோதுதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், நாய்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு அருகில் இரண்டு நபர்களின் கைகள் மட்டுமே வெளியே தெரிந்தபடி இருக்க, உடல் முழுவதும் பனியில் புதைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, சம்பவம் இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் உடனடியாக பனியில் புதைந்திருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பனியில் சிக்கியிருந்த இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்த நிலையில் குளிரால் இருவருக்கும் hypothermia என்கிற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் இருவரும் உயிருடன் காப்பாற்றப்பட அந்த இரண்டு நாய்கள்தான் முக்கிய காரணம். இந்நிலையில் தங்கள் எஜமானர்களை காப்பாற்றிய இரண்டு நாய்களும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.