கொரனோ வைரஸின் கோரத்தாண்டவம்! அவசர அவசரமாக எல்லையை மூடிய ஹாங்காங்!



Hong Kong closed border for corona

சீனாவில் வுஹான் நகரில் உயிரை குடிக்கக்கூடிய கொடூர கொரனோ வைரஸ் தோன்றி தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது.இந்த கொரனோ வைரஸால் தாக்கப்பட்டு இதுவரை 360க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் உலகம் முழுவதும் 22000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 உலக நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் சீன நாட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

corona

உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்,  ஹாங்காங் நாட்டிலும் பரவியது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு காரணமாக தன் நாட்டின் சீன எல்லைப்பகுதியை மூடுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. ஹாங்காங்கில் தற்போது வரை 16 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.