கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
இந்தியா ஒரு அடி முன்வைத்தால், நாங்கள் இரண்டு அடி முன்வைக்க தயார்; இம்ரான் கான் அறிவிப்பு
பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், உதிரி கட்சிகளின் ஆதரவுடன், பிரதமர் பதவியை பிடிக்கும் முயற்சியில், இம்ரான் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க விரும்புவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இம்ரான் கான் தெரிவித்ததாவது: இந்த தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்கது. 22 ஆண்டு கால பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன; இதில் எனக்கு வருத்தம் உள்ளது.
காஷ்மீர் மக்கள் நீண்ட நாட்களாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் இந்தியாவுடன் நட்புறவை எப்போதும் பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வரிசீர்திருத்தம் மற்றும் அரசு செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண முடியும். இந்திய தலைமை அதை விரும்பினால், உடனடியாக பேச்சு நடத்த தயார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியா ஒரு அடி முன்வைத்தால், நாங்கள், இரண்டு அடி முன்வைக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.