நிலக்கரி சுரங்கத்தில் துப்பாக்கிசூடு; 20 பேர் கொடூர கொலை.. பாகிஸ்தானில் சோகம்.!



in Pakistan Balochistan Coal Mine Terror Attack 

ஆயுதமேந்திய குழுவின் போராட்டத்தால் அரசு மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் சமீபகாலமாகவே ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் தாக்குதல் அரசுக்கு எதிராக நடந்து வருகிறது. முன்னதாக பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தான், இன்று அதே பிரச்சனையை எதிர்கொண்டு நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்ந்து வருகிறது. 

அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை கையில் எடுத்துள்ள பயங்கரவாதிகள் குழு இராணுவத்தினர், பொதுமக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தென்மேற்கு பாகிஸ்தானில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: புளோரிடா மாகாணத்தை புரட்டியெடுத்த மில்டன் புயல்; பதறவைக்கும் காட்சிகள்.!

World news

20 பேர் சுட்டுக்கொலை, 6 பேர் படுகாயம்

அங்குள்ள பலோசிஸ்தான் மாகாணம், துகி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் நுழைந்த ஆயுதமேந்திய கும்பல், அங்கு பணியாற்றி வந்த 20 க்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொலை செய்துள்ளது. மேலும், 6 பேர் காயத்துடன் உயிர்தப்பி இருக்கிறார்கள். 

இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டது யார்? என தெரியவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்கு தற்போது வரை பொறுப்பேற்கவில்லை. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: 9 வயது சிறுமி முதல் 44 வயது வரை பெண்கள் பலாத்காரம்; சீரியல் ரேப்பிஸ்ட்க்கு 42 ஆயுள் தண்டனை.!