#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
9 வயது சிறுமி முதல் 44 வயது வரை பெண்கள் பலாத்காரம்; சீரியல் ரேப்பிஸ்ட்க்கு 42 ஆயுள் தண்டனை.!
9 வயது சிறுமி முதல் பல இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தென்னாபிரிக்க சீரியல் பலாத்கார ஆசாமி நிக்கோஸினாதி பாகத்திக்கு (Nkosinathi Phakathi) 42 ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
90 பெண்கள் கற்பழிப்பு
44 வயதாகும் குற்றவாளியான நிக்கோஸினாதி, கடந்த 2012 ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை மொத்தமாக 90 க்கும் அதிகமான குற்றங்களை செய்துள்ளார். 9 ஆண்டுகளுக்குள் 90 க்கும் அதிகமான இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர், இறுதியில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமியை கத்தியால் குத்திக்கொண்டு 13 வயது அக்கா.. பதறவைக்கும் சம்பவம்.!
சிறுமிகளும் டார்கெட்
சுமார் 9 வயதுள்ள சிறுமிகள் முதல் இளம்பெண்கள் என 44 வயதானோர் வரை பலரையும் வெவ்வேறு காலகட்டங்களில் பலாத்காரம் செய்த குற்றவாளி, பெரும்பாலும் பள்ளி சிறுமிகளை சீரழித்து இருக்கிறார். இதுபோதாதென சிறுமிகளை வற்புறுத்தி, கொடுரமாக பலாத்காரம் செய்துள்ளார்.
42 ஆயுள் சிறை தண்டனை
பள்ளி, வேலைக்கு செல்லலும் பெண்களை குறிவைத்து பலாத்காரம் செய்தவர், இறுதியில் 2021 ம் ஆண்டு காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். இதனையடுத்து, இறுதியில் அவரின் மீதான குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, தற்போது அவருக்கு 42 ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Israel Iran War: உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி.. போரை தொடங்கியது ஈரான்... இஸ்ரேலில் பாய்ந்த 100+ ஏவுகணைகள்.!