காதலால் இணைந்த இந்தியா-பாக்கிஸ்தான் பெண்கள்! கோலாகலமாக நடந்த திருமணம்
இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பெண்கள் கொலம்பியாவில் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டனர்.
இந்தியாவை சேர்ந்த பியான்கா என்ற கிறிஸ்தவ பெண்ணும் பாக்கிஸ்தானை சேர்ந்த சாய்மா என்ற முஸ்லீம் பெண்ணும் கடந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது அறிமுகமான இருவரும் நண்பர்களாக பழக துவங்கினர்.
நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் பிரந்து செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இதனால் அவர்கள் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளது.
இவர்களது நெருக்கத்தை கண்டு பலரும் கேலி செய்தனர். அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடைசியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி 4 நாட்கள் கொலம்பியாவில் கோலாகலமாக நடைபெற்ற அவர்களது திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் உட்பட 200 பேர் கலந்துகொண்டனர்.
இந்த திருமணத்தில் இந்தியாவை சேர்ந்த பியான்கா மணப்பெண்ணாகவும் பாக்கிஸ்தானை சேர்ந்த சாய்மா மணமகனுக்கான உடையும் அணிந்திருந்தனர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.