குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
#Breaking: இஸ்ரேல் - பாலஸ்தீனிய போரில் முக்கியப்புள்ளி வீழ்த்தப்பட்டது; போரை வழிநடத்திய தலைமை பயங்கரவாதி கொலை.!
அக்.07ம் தேதி இஸ்ரேலிய நாட்டை எதிர்த்து, பாலஸ்தீனியத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் போரை முன்னெடுத்தனர். எவ்வித அறிவிப்பும் இன்று முன்னெடுக்கப்பட்ட போரில் முதலில் இஸ்ரேலிய அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டாலும், தற்போது இஸ்ரேலின் பதில் தாக்குதலில் பாலஸ்தீனியத்தை சேர்ந்த மக்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
தற்போது வரை போரில் இஸ்ரேலை சேர்ந்த 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பாலஸ்தீனிய மக்கள் 6400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து இராணுவத்தினரால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் முக்கிய படைத்தலைவராக கருதப்படும் நபர்களில், நடப்பு போரை முன்னின்று நடத்திய அசீம் அபு ரக்ஃபா இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் தரப்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை.