#JustIN: இஸ்ரேல் - ஹமாஸ் போர் உச்சகட்டம்; 10,000 பேர் பலியானது உறுதி.! 



Israel Palestine War 10000 Palestine Peoples Died In War Reports Confirmed 

 

கடந்த அக்.07 ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் அரசை எதிர்த்து, தங்களின் வரலாற்றில் இருக்கும் பாலஸ்தீனியத்தை உருவாக்க நினைக்கிறோம் என்ற பெயரில், ஈரான் உட்பட சில நாடுகள் திரைமறைவில் உதவி செய்த ஆயுதங்களை பெற்று போரை தொடங்கிவைத்து. 

முதலில் தனது தரப்பில் இஸ்ரேல் - பாலஸ்தீனிய எல்லையில் உள்ள மக்களை கொடூரமாக இழந்த இஸ்ரேல், வான்வழியாக வந்த பெரும்பாலான தாக்குதலை தனது எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மூலமாக தவிடும்படியாக்கி, பதில் தாக்குதலை மேற்கொண்டது. 

ஹமாஸின் போரில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஹமாஸை போல அல்லாமல் காசா நகரில் வான்வழி தாக்குதல் நடக்கும் என்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 

World news

இதனையடுத்து, இஸ்ரேல் தொடங்கிய வான்வழித்தாக்குதல் தற்போது வரை 10,022 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேலின் தரப்பில் 1,400 பொதுமக்கள் கொடூரமாக ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர். 

போரின் காரணமாக இருதரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டு இருப்பினும், பாலஸ்தீனிய மக்கள் கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு உலகநாடுகள் மனிதாபிமான உதவியை செய்கிறது. அமெரிக்கா போரின் தீவிரத்தை உணர்ந்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது போர்கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக அங்கு பல நாடுகள் செயல்படுகின்றன. ஒருவேளை அமெரிக்க துருப்புகள் சதிச்செயலால் தாக்கப்பட்டு வீழ்ந்தால், போரில் அமெரிக்கா களமிறங்கி உச்சகட்ட உலக பதற்றம் ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.