குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்.!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஜப்பானை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கென் ஷிமுரா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இவரின் இறப்பு இவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா பாதிப்பால் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். பலலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கென் ஷிமுரா உயிர் இழந்துள்ளார். பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்துள்ள இவர் தனது 70 வது வயதில் உயிர் இழந்துள்ளார்.
கென் ஷிமுராவின் இந்த மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.