தனது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்ற நியூசிலாந்து பெண் MP!! வைரல் புகைப்படங்கள்..



New Zealand MP gives birth after cycling to hospital in labour

நியூசிலாந்தின் கிரீன் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் தனது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்ற சம்பவம் வைரலாகிவருகிறது.

நியூசிலாந்தின் கிரீன் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) தனது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜூலி ஆன் ஜென்டர் தனது முதல் குழந்தையான ஒரு மகனின் பிறப்பின் போது இதையே செய்துள்ளார்.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சமீபத்திய இடுகையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வலிமிகுந்த தருணத்தின் போது மருத்துவமனைக்கு சைக்கிள் ஓட்டிசென்ற கதையைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்றோம். நான் உண்மையிலேயே பிரசவத்தில் சைக்கிள் ஓட்டத் திட்டமிடவில்லை, ஆனால் அது நடந்து முடிந்தது. நாங்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக அதிகாலை 2 மணிக்குச் சென்றபோது எனக்கு அவ்வளவாக வலி இல்லை.

ஆனால் நாங்கள் 10 நிமிடங்கள் கழித்து மருத்துவமனை வருவதற்குள் தீவிரம் அதிகரித்தது. இருப்பினும் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பிரசவம் நடைபெற்றது. இப்போது எங்களிடம் ஒரு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை பிறந்துள்ளது." என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.