குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு! கொரோனா வைரஸை ஒழிக்க, நித்தியானந்தா கொடுத்த ஐடியாவை பார்த்தீர்களா!
சீனாவில் வுஹான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 25 மேற்பட்ட நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸால் 902க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் உலகளவில் 40000க்கும் அதிகமான பேர் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல நாட்டினரும், சொந்த தாயகத்திற்கு திரும்ப அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸை அழிக்க நித்தியானந்தா ஆலோசனை வழங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தொடர்ந்து இடைவிடாமல் 'ஓம் நித்தியானந்த பரமசிவோகம்' என கூறி கொரோனாவை அழிக்க முடியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.