96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மின் கசிவால் சோகம்; பெண், 7 குழந்தைகள் உடல் கருகி பலி.!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள அபோபாத் மாவட்டம், தஹாரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்று நேற்று தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிக்கிக்கொண்டு உயிருக்காக அலறியுள்ளனர்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ஏழு குழந்தைகள், ஒரு பெண் என எட்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.