மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
24/7 சிசிடிவியை தலையில் சுமக்கும் பெண்.! அதிர்ச்சி விளக்கம் கொடுத்த தந்தை.!
தொழில்நுட்ப வளர்ச்சி
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய தலையில் சிசிடிவி கேமராவை சுமந்தவாறு உலா வரும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சிசிடிவி கேமரா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. கொள்ளை மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா மிகவும் உதவுகிறது.
இதையும் படிங்க: 104 கிமீ வேகத்தில் அசுரத்தனமான காற்று; வியட்நாமை புரட்டியெடுத்த யாகி புயல்..!
சிசிடிவி தலை
Pakistan🫡😭
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 6, 2024
pic.twitter.com/Hdql8R2ejt
சிசிடிவியை இப்படி கூட பயன்படுத்த முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது தலையில் சிசிடிவியை எப்பொழுதும் சுமந்து கொண்டு சுற்றி திரிகிறார். 24 மணி நேரமும் அந்த பெண்ணின் தலையிலேயே 360 டிகிரி கோணத்தில் சிசிடிவி படம் பிடிக்கிறது.
இதைப்பற்றி எந்த ஒரு லஜ்ஜையும் இல்லாமல் அவர் உலா வருகின்றார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை பேசியபோது தனது மகளுக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் இந்த கண்காணிப்பு கேமராவை தான் பொருத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் ஓவர் தான்
இது பற்றி பெண்ணின் கருத்தை கேட்டபோது என் தந்தை எது செய்தாலும் என் நல்லதுக்கு தான் செய்வார், எனவே அதை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். என்ன இருந்தாலும் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்ணின் தலையில் சிசிடிவி கேமராவை வைத்திருப்பது கொஞ்சம் ஓவர் தான் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவா? தமிழ்நாடா?.. அமெரிக்காவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பில் இன்ப வெள்ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!