96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"ஹேங் ஓவர்" திரைப்பட பாணியில் சம்பவம்; ஈபிள் டவர் உச்சியில் போதையில் உறங்கிய அமெரிக்கர்களால் பரபரப்பு.!
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் இருக்கும் ஈபிள் டவர் உலகப்புகழ்பெற்ற சுற்றுலா மையமாக இன்றளவில் இருக்கிறது. ஈபிள் கோபுரம் காலை 9 மணிக்கு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும். அதற்கு முன் பாதுகாவலர்கள் ஆய்வு நடக்கும்.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி சம்பவத்தன்று காலை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, இரண்டு அமெரிக்கர்கள் கோபுரத்தின் உச்சியில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள், இவர்கள் எப்படி இங்கு வந்தனர்? என குழம்பிப்போயினர். அதாவது, பொதுமக்கள் அனுமதிக்கப்படாத பகுதியில், இவர்கள் இரவு நேரத்தில் உறங்கி இருக்கின்றனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், இருவரையும் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹேங் ஓவர் திரைப்படத்தில் இளைஞர்கள் தங்களை நரிக்கூட்டம் என கூறிக்கொண்டு, அதிக போதையை உட்கொண்டு என்ன செய்கிறோம் என தெரியாமல் இரவில் கூத்தாடிவிட்டு மறுநாள் காலையில் நடனத்தை கண்டறிந்து, தவறிப்போன நண்பனை கண்டுபிடிப்பார்கள். அதே திரைப்பட பாணியில் போதையில் அமெரிக்கர்கள் பிரான்சில் செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.