வெடித்து சிதறிய எரிமலை..! ஒரு கிலோமீட்டர் மேலே எழுந்த புகை..! அச்சத்தில் மக்கள்..!



Philippines taal volcano eruption

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 24 எரிமலைகளில் இரண்டாவது மிகப்பெரிய எரிமலையாக கருதப்படுவது டால் எரிமலை. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் உள்ளஏரிக்கு நடுவே இந்த எரிமலை உள்ளது. ஏற்கனவே இந்த எரிமலை வெடித்து சிதறியதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர்.

இந்நிலையில் மீண்டும் இந்த எரிமலை வெடித்துள்ளது. எரிமலை வெடிப்பினால் சுமார் 1 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்ணில் சாம்பல் புகை வெளியேறிவருகிறது. மேலும், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. டால் எரிமலையின் இந்த திடீர் வெடிப்பினால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

volcano eruption

மேலும், எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல், மணிலா விமான ஓடுதளம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 170 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.