96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கடற்கரைக்கு சென்ற ஏழை மீனவன்.! அங்கு கிடைத்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர்.!
கடலில் உள்ள உயிரினங்களில் பெரிய அளவில் உள்ள உயிரிணம் திமிங்கலம். இதன் வாந்தியின் மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என கூறுகின்றனர். திமிங்கலத்தின் வாந்தி, அதன் விந்தணுச் சுரப்பில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருளை உள்ளடக்கியது. இது, வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
இந்தநிலையில், தாய்லாந்தில் பரம ஏழையான மீனவர் ஒருவர் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கில வாந்தியால் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அந்த மீனவருக்கு கிடைத்திருப்பது, உலகில் இதுவரை யாருக்கும் கிடைத்திராத மிக அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது.
தாய்லாந்தின் தென் பகுதியில் வசித்துவந்த 60 வயதான மீனவர் நாரிஸ் என்பவருக்கு தற்போது சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது. தற்போது தொழிலதிபர் ஒருவர், அதன் தரத்திற்கு தகுந்தாற்போல் கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலை கொடுக்கலாம் என மீனவரிடம் கூறியுள்ளார்.
மாதம் 500 பவுண்டுகள் கூட சம்பாதிக்க முடியாத ஏழையான மீனவருக்கு தற்போது சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப் போகிறது. அதன் மதிப்பு அதிகம் என்பதால் கொள்ளை சம்பவம் நடந்துவிட கூடாது என்பதற்காக போலீசாரின் உதவியையும் மீனவர் நரிஸ் நாடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.