இது மட்டும் நடந்தால் பூமி 10 வருடம் இருளில் மூழ்கும், பேராபத்து நிச்சயம்! பதறவைக்கும் தகவல்கள்.
இந்த உலகில் மிகவும் பலம் வாய்ந்த இரு நாடுகளாக கருதப்படுபவை அமெரிக்கா மற்றும் ரஷ்யா. ராணுவம், அணு ஆயுதம், போர் விமானங்கள், ஏவுகணை என இரண்டு நாடுகளும் ஒன்றுக்கு ஓன்று சளைத்தது அல்ல. பரம்பரை எதிரிகளான இந்த இரண்டு நாடும் அவ்வப்போது வார்த்தை போர் நடத்தி வருகிறது. ஒருவேளை இந்த இரண்டு நாடுகள் இடையே போர் மூண்டு, அணு ஆயுத தாக்கல் நடத்தப்பட்டால் இந்த பூமி என்ன ஆகும் தெரியுமா?
ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஜோஸுவா கூப் இது பற்றி கூறுகையில் அமெரிக்க - ரஷ்யா இடையே அணு ஆயுத போர் மூண்டால் ஏவுகணைகளில் இருந்து வெளியேறும் தீ, 147 மில்லியன் டன் புகைக்கரி மற்றும் தூசியை வளிமண்டலத்தில் வெளியிடும்.
இந்த புகை மண்டலமானது சுமார் 10 ஆண்டுகள் சூரிய ஒளியைத் தடுக்கும் சக்தி கொண்டது. ஒளி மீண்டும் இயல்பு நிலைக்கு வர பத்து ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ளார். மேலும், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 9 செல்சியஸ் வீழ்ச்சியடையும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பூமியின் வெப்பநிலை குறைந்து பூமி மிக குளிர்ச்சியானதாக மாறும் அபாயம் உள்ளதாகவும் ஜோஸுவா கூப் கூறியுள்ளார். அமெரிக்க மற்றும் ரஷ்யா மட்டும் இல்லாது இந்த போர் உலகளவில் பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.