ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞர்.. பார்சலை பார்த்ததும் முதல் அதிர்ச்சி.. பிரித்து பார்த்தபோது 2 வது அதிர்ச்சி..



Teen ordered iphone table instead of iphone

மலிவான விலையில் ஐபோன் வாங்க ஆசைப்பட்ட இளைஞர் கடைசியில் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக ஐபோன் என்றால் பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும். ஐபோன் வாங்க வேண்டும் என்பது தனது வாழ்நாள் கனவு என்று கூட சிலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமான தொலைபேசிதான் இந்த ஐபோன்.

அந்தவகையில் தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐபோன் ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்துவந்துள்ளது. இதனால் ஏதாவது வலைத்தளத்தில் ஐபோன் குறைந்த விலைக்கு கிடைக்குமா என தேடி பார்த்துள்ளார். அப்போது வலைத்தளம் ஒன்றில், மிக மிக குறைந்த விலைக்கு லேட்டஸ்ட் மாடல் ஐபோன் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்திருப்பதை பார்த்து உடனே ஆர்டர் செய்துவிட்டார்.

Viral News

இந்நிலையில் ஆர்டர் செய்த சில நாட்களில் அந்த இளைஞரின் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த பார்சலைப் பார்த்த அந்த இளைஞர் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். காரணம், வீட்டிற்கு வந்த பார்சல் அந்த இளைஞரின் உயரத்திற்கு இருந்துள்ளது.

ஐபோனுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய பார்சல் என, ஆர்வத்துடன் திறந்து பார்த்த அவருக்கு மேலும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவருக்கு வந்தது ஐபோன் இல்லை. ஐபோன் வடிவிலான ஒரு டேபிள் இருந்துள்ளது. அந்த டேபிளானது ஐபோன் வடிவத்தில் வடிமைக்கப்பட்டுள்ளது.

இதனை தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ள அந்த இளைஞர், ஆர்டர் செய்வதற்கு முன்பு அதன் தயாரிப்பு விவரங்களை தான் முழுமையாக காண தவறிவிட்டதாகவும், தற்போது தனது தவறை எண்ணி வருத்தப்படுவதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.