96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை 872 ஆக உயர்வு... மீட்பு பணிகள் தீவிரம்.!
ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 872 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 672 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ நாட்டில் நேற்று இரவு 11;11 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. மேலும் இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் அதிக அளவில் உணரப்பட்டது.
இந்த நில அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதன் இடுபாடுகளில் சிக்கி இதுவரை 872 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது .
கட்டிடங்களுக்கிடையே சிக்கி இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.