மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டேட்டிங் போகும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் லீவு; அசத்திய தாய் நிறுவனம்.!
தாய்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் வைட்லான் மார்க்கெட்டிங் நிறுவனம், அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனிடையே, அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர், தனது துணையுடன் டேட்டிங் செல்ல தங்களுக்கு நேரமில்லை என புகார் முன்வைத்து இருக்கிறார்.
இதனையடுத்து, நிறுவனம் சார்பில் டிண்டர் டேட்டிங் செயலியில் பிரீமியம் சந்தாவை பணியாளர்களுக்கு வாங்கிக்கொடுத்த நிர்வாகம், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தது. டேட்டிங் செல்ல விரும்பும் பணியாளர்கள், தங்களின் துணையுடன் செல்லலாம் எனவும் அறிவித்தது.
இந்த அறிவிப்பு சக பணியாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனத்தின் அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. பெருநிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு அவ்வப்போது இதுமாதிரியான போனஸ் அறிவிப்பை வெளியிடுவதால், ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒட்டுமொத்தமாக நோய்கிருமியை அழிக்க ஆல்கஹால் குளியல்.. 45 வயது பெண் பரிதாப பலி.!
இதையும் படிங்க: தமிழ் பெண்மணி உட்பட 4 இந்தியர்கள் அமெரிக்காவில் மரணம்; சாலை விபத்தில் சோகம்..!