அடேங்கப்பா!! 150 ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள்!! எப்படி இருக்கு பாருங்க.. வீடியோ..



Thousands of 150 Million-Years-Old Dinosaur Footprints in China

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் படி, சீன ஆராய்ச்சியாளர்கள் 4,300 க்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்களை வடக்கு சீன மாகாணமான ஜாங்ஜியாகோவில் ஹெபேயில் (SCMP) கண்டறிந்துள்ளனர். ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட்ட அறிவியல் அறிக்கையின்படி, 9,000 சதுர மீட்டர் அளவிலான கால்தடங்கள்  ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் காலங்களுக்கு இடையில் அல்லது சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டன என கூறியுள்ளனர்.

dinosaur

சைனா டெய்லி படி, விஞ்ஞானிகள் டைனோசர்களின் நீளம், எடை மற்றும் அளவு ஆகியவற்றை அவற்றின் கால்தடங்களில் இருந்து தீர்மானிக்க முடியும் மற்றும் அவற்றின் நடை வேகத்தை  கணக்கிட முடியும் என தெரிவித்துள்ளனர்.

கால்தடங்கள் டைனோசர்களின் வாழ்க்கைப் பழக்கம் மற்றும் நடத்தையைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், அந்த நேரத்தில் டைனோசர்களுக்கும் அவற்றின் வாழ்க்கைச் சூழலுக்கும் இடையிலான உறவையும் விளக்குகிறது, ”என்று சீனா புவி அறிவியல் பல்கலைக்கழகத்தின் டைனோசர் நிபுணர் ஜிங் லிடா சீனா தெரிவித்துள்ளார்.