சீனாவில் ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தோன்றியதால் ஆச்சரியம்!! வைரல் வீடியோ!!!



Three sun in china video goes viral

சீனாவில் ஒரே நேரத்தில் வானில் மூன்று சூரியன்கள் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியயையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 முதலில் இரண்டு சூரியன்கள் தோன்றிய நிலையில் அடுத்ததாக மூன்றாவது சூரியனும் தோன்றியுள்ளது. இந்த நிகழ்வை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்னனர்.

 அது எப்படி மூன்று சூரியன்கள் தோன்றும்? இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள்.  சூரிய ஒளி அந்தப் பகுதியில் இருக்கும் ஈர பகுதிகளை கடந்து செல்லும்போது அதன் ஒளி வானில் இருக்கும் பனித் துகள்கள் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.