96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இந்தியர்கள் என்றாலே உக்ரேனியர்கள் உக்கிரமாக அடிக்கிறார்கள் - தமிழக மாணவர் பகீர் வீடியோ.!
உக்ரைன் - ரஷியா போர் 8 ஆவது நாளாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷியா பல்முனை தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. அங்குள்ள பல்வேறு நகரங்கள் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் தவித்து வரும் திருச்சி திருவெறும்பூர், காட்டூர் கிராமத்தை சேர்ந்த மாணவர் கிப்சன் ஜோசப் செல்வராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "உக்ரைனில் போர் உச்சக்கட்டம் எட்டியுள்ளது. கார்க்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்கையில், அவர்கள் நகரை விட்டு மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறினார்கள். எல்லைப்பகுதிக்கு இயக்கப்படும் சிறப்பு இரயிலில் பயணிக்க தயாராகி சென்றோம். அங்கு இருந்த உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள், எங்களை தடுத்தார்கள்.
இந்திய மாணவர்களாகிய எங்களை மிதித்தும், அடித்தும் தள்ளிவிட்டார்கள். உயிருக்கு அஞ்சி அங்கிருந்து நாங்கள் ஓட்டம்பிடித்தோம். இதனால் அங்கிருந்து 6 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்று, மற்றொரு இரயில் நிலையத்தில் இருக்கிறோம். பசியால் தவிக்கிறோம்.
என்னைப்போல 200 மாணவர்கள் இங்கு தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தான் எங்களுக்கு 2 பிஸ்கெட் சாப்பிட கொடுத்தார்கள். மெட்ரோ இரயில் நிலையத்தில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அனுமதி இல்லை. அதனால் அவர்களுக்கு தெரியாமல் செல்பி வீடியோ மூலம் பேசுகிறேன். எங்களை எப்படியாவது மீட்டுவிடுங்கள்" என்று தெரிவிக்கிறார்.