ஷாக்கிங்... சிறுவர்களுடன் பாலியல் உறவு..14 வயது சிறுமி போல் நாடகம்.!! அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்.!!
பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்காக 14 வயது சிறுமி போல நடித்த 23 வயது இளம் பெண்ணை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா நகரை சேர்ந்த அல்யீஸ்ஸா அன் ஸிங்கர் என்ற 23 வயது பெண் பள்ளியில் பயிலும் சிறுவர்களுடன் பாலியல் உறவில் எடுபடுவதற்காக 14 வயது சிறுமி போல நடித்திருக்கிறார். இவர் ஸ்னாப் சாட் செயலியை பயன்படுத்தி 12 வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுடன் சாட் செய்துள்ளார்.
மேலும் மாணவர்களின் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் தனிப்பட்ட சில வீடியோக்களையும் அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நான்கு மாணவர்கள் புகார் வழங்க முன் வந்ததை தொடர்ந்து டாம்பா நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த 23 வயது பெண்மணியை கைது செய்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதமும் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக 7,500 அமெரிக்க டாலர் அபராத தொகையை செலுத்தி சிறையில் இருந்து வெளிவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற குற்ற செயல்கள் மிகவும் வருத்தம் அளிக்கும் விதமாகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருப்பதாக குறிப்பிட்ட காவல்துறையினர் இதுபோன்ற தொடர்பாக தாமாக முன்வந்து புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.