#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் வீட்டில் நடந்த திடீர் துயர சம்பவம்; போலீஸ் விசாரணை
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தொலைக்காட்சில் பார்க்கும் நமக்கு திரையில் தெரியும் பங்கேற்பாளர்களை மட்டும் தான் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பின்னால் இருந்து வேலை செய்பவர்களை பற்றி நாம் ஒருபோதும் யோசிப்பதே இல்லை.
விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த பிக் பாஸ் செட்டில் பல தொழிலாளர்கள் ஸ்டூடியோவில் தங்கி இரவுப் பகலாக வேலை செய்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் ஏசி மெக்கானிக் குணசேகரன். இவர் அரியலூர் மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர்.
நேற்று இரவு இவர் தான் தங்கியுள்ள அறையின் இரண்டாவது மாடிக்கு சென்று சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்றுள்ளார். அப்போது 2 வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் குணசேகரனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குணசேகரன் பலியானார். இதுகுறித்து நசரத்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குணசேகரன் மரணம் குறித்த காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.