மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பொது இடத்தில் பெண்ணிடம் கன்னத்தில் அரை வாங்கிய 'பாகுபலி' நடிகர்!"
2002ம் ஆண்டு "ஈஸ்வர்" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் பிரபாஸ் ராஜு உப்பலப்பட்டி. இதையடுத்து அதே ஆண்டு "ராகவேந்திரா" என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் 2004ம் ஆண்டு இவர் நடித்த "வர்ஷம்" திரைப்படம் தான் இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
தொடர்ந்து முன்னா, மிர்ச்சி, டார்லிங், மிஸ்டர். பெர்பெக்ட் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைக் கொடுத்து தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து பிரபாஸ் நடித்த எந்தப் படமும் பாகுபலி அளவிற்கு இல்லையென்றாலும், சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைக் கூட பெறவில்லை. தற்போது "சலார்" படத்தில் பிசியாக இருக்கும் பிரபாஸ், ஒரு பெண்ணிடம் கன்னத்தில் அரை வாங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று ஏர்போர்ட்டில் பிரபாஸை பார்த்த அவரது ரசிகை ஒருவர், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அவரைப் பார்த்த உற்சாகத்தில் துள்ளிக்குதித்த அந்த பெண், சில நொடிகளில் யாரும் எதிர்பாராத விதமாக பிரபாஸின் கன்னத்தில் லேசாக அறைந்துவிட்டு ஓடிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.