திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருப்பதி கோவிலில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குனர்.. வெளியான புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்.?
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது 'ஆதிபுருஷ்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. ஓம் ரவுத் இயக்கியுள்ள ஆதி புருஷ் திரைபடத்தின் கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோஷன் வீடியோ வெளியாகி ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். இதனிடையே தற்போது திருப்பதியில் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி நடைபெற்று படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்ற படக்குழுவினரின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அப்புகைபடத்தில் இயக்குநர், ஆதி புருஷ் படத்தின் நடிகை கீர்த்தி சனோனுக்கு முத்தமிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.