அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
ராஜா ராணி செம்பாகிட்ட பேசணுமா? அவரே வெளியிட்ட புது நம்பர்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ராஜா ராணி. ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. இதில் கதாநாயகனாக குளிர் 100 டிகிரி பட நடிகர் சஞ்சீவ் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கதையின் நாயகியாக ஆலியா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசு கிசு வந்தது. முதலில் அதை மறுத்தவர்கள், இன்று இருவரும் காதலிப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் விளம்பரம், நாடகம், நடனம் என பிசியாக இருக்கிறார் ஆலியா. இதனால் அவரை பலரும் தொடர்பு கொள்ளமுடியாமல் போய்விடுகிறதாம். அதனால் எதுவாக இருந்தாலும் தனது மேனேஜரிடம் பேசும்படி அவரது நம்பரையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.