மதுரை: வீட்டு வாசலில் ரவுடி வெட்டிப்படுகொலை; சிறையில் ஸ்கெட்ச், வெட்டிசாய்த்த கும்பல்.!



in Madurai Thirumangalam Rowdy Killed 

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், மொட்டைமலை பகுதியில் வசித்து வருபவர் காளீஸ்வரன். இவர் உள்ளூரில் ரௌடியாக இருக்கிறார். 

காளீஸ்வரன் மீது கொலை முயற்சி, அடிதடி என பலவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே, நேற்று இரவு நேர்த்தி, காளீஸ்வரன் தனது வீட்டின் வெளியே இருந்தார்.

இதையும் படிங்க: மதுரை: பயணம் செய்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பலி.. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.! அதிர்ச்சிதரும் காட்சிகள்.!

சதித்திட்டம் அரங்கேற்றம்

அப்போது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், காளீஸ்வரனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. தகவல் அறிந்த காவல்துறையினர், காளீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோகனைக்காக அனுப்பி வைத்தனர்.

madurai

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், காளீஸ்வரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது அம்பலமானது. மதுரை சிறையில் இருக்கும் ரௌடியின் சதித்திட்டத்தின் பேரில் காளீஸ்வரன் கொல்லப்பட்டுள்ளார். 

இதனால் காளீஸ்வரனை கொலை செய்ய காரணம்? தப்பிச் சென்ற மர்ம நபர்கள் யார்? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: #JustIN: மதுரையில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம்; 4 பேரிடம் விசாரணை.. 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு.!