இந்த வகை உணவெல்லாம் சாப்பிடுறீங்களா? புற்றுநோய் அபாயம்.. எச்சரிக்கை.! 



Cancer Causes Foods in Tamil 

 

உலகளவில் அபாயகரமான, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடூர நோய்களில் ஒன்றாக கேன்சர் இருக்கிறது. கேன்சரை தடுக்க தடுப்பு மருந்தும் ஆராய்ச்சி நிலையில் இருப்பதால், கேன்சரால் பாதிக்கப்படும் நபர்களுக்கு பிற சிகிச்சைகள் மூலமாக உயிர்பாதுகாப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. புற்றுநோயை பொறுத்தவரையில், அதனை தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தும் வாய்ப்பு மற்றும் நேரம் கிடைக்கிறது. அந்த வகையில், நாம் உண்ணும் உணவில் கூட கேன்சரை உண்டாகும் விசயங்கள் இருக்கின்றன. அவை குறித்து இன்று காணலாம்.

குளிர்பானங்கள்

கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருளை கொண்டுள்ளது. ஆகையால், கேனில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: மாதுளை பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? விபரம் இதோ.!

கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானம்

குளிர்பானங்களில் கார்பனேற்றம் செய்யப்பட்டவற்றில் அதிக சர்க்கரை இருக்கும். இவை கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஹைட்ரஜனேற்ற எண்ணெய்

கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்டு விநியோகம் செய்யப்படும் உணவுகள் போன்றவற்றில், அதன் காலக்கெடுவை அதிகரிக்க ஹைட்ரஜனேற்ற எண்ணெய் கலக்கப்படும். இது ப்ரீ-ரேடிகளை வெளியிடும். இந்த ரேடிகல் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கும். 

health tips

பாப்கார்ன்

மக்காசோளம் உடலுக்கு கேடை ஏற்படுத்துதது எனினும், மைக்ரோவேவ் முறையில் தயாரிக்கப்படும் பாப்கார்னில், பேரபுளுரோக் டனாயிக் அமிலம் இருக்கும். இது புற்றுநோயை உண்டாக்கும். 

சுத்திகரிப்பு செய்யப்பட்ட சர்க்கரை

நாம் டீ, பழசாறு போன்றவற்றுக்கு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்தினால், அவை இன்சுலின் அளவை அதிகரிக்கும். இது உடலில் உள்ள புற்றுச்செல்களின் வளர்ச்சியை தூண்டும். 

பதப்படுத்தப்படும் இறைச்சி & சிவப்பு இறைச்சி:
பதப்படுதியை இறைச்சி வகைகள் புற்றுநோய்கான காரணியாக அமைகிறது. அதேபோல, சிவப்பு இறைச்சியை அளவுக்கு அதிகம் எடுத்துக்கொள்வது குடல் புற்றுநோய்க்கு வழிவகை செய்யும். 

ஊறுகாய் 

பலரும் நாவில் எச்சிலை ஊறவைக்கும் ஊறுகாய், வீட்டில் செய்யப்பட்டால் நலமே. அதிலும் குறைந்தளவே ஊறுகாயை பயன்படுத்த வேண்டும். அதேவேளையில், கடையில் விற்பனை செய்யப்படும் ஊறுகாயில் உள்ள அதிக சோடியம், வயிற்றுப்புற்றுநோயை அதிகரிக்கும். 

புகையில் தயாராகும் இறைச்சி

இன்றளவில் சிக்கன், மீன் வகைகளை பல முறைகளில் சமைக்கின்றனர். அந்த வகையில், புகையிட்டு சமைக்கப்படும் இறைச்சிகளில் ஹைட்ரோ கார்பன் உண்டாகும். இதனை தொடர்ந்து எடுப்பது வயிற்று புற்றுநோயை ஊக்குவிக்கும். 

கருவாடு

பலருக்கும் பிடித்த கருவாடு, உப்பு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் கருவாடு நைட்ரோசோம் கொண்டுள்ளது. இது மூக்கு புற்றுநோயை ஊக்குவிக்கும். 

மேற்கூறிய உணவுகளில் குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஊறுகாய் போன்றவை கட்டாயம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். முடிந்தளவு புற்றுநோயை ஊக்குவிக்கும் விஷயங்களை தவிர்க்க பழகுங்கள். ஊறுகாய் வேண்டும் என்றால் வீட்டில் செய்து சாப்பிடலாம். வணிக ரீதியாக வாங்கும் பொருட்களில், அவர்களின் மூலதனம் இலாபம் என்பதால், அதில் அரசின் அனுமதியுடன் தரநிர்ணயபடி பொருட்கள் சேர்க்கப்பட்டாலும், உடலுக்கு உபாதை என்பது நிச்சயம். 

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை வெயில்; கீவி பழத்தின் அசத்தல் நன்மைகள்.!