தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கருவில் இருக்கும் குழந்தையை அழிக்க நினைப்பவருடன் வாழனுமா.? மனைவி கூறிய வார்த்தையால் அதிர்ந்து போன நெப்போலியன்..
தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நெப்போலியன். இவர் கதாநாயகனாக நடித்ததை விட வில்லனாக நடித்தது அதிகம்.
பாரதிராஜாவால் 'கிழக்கு சீமையிலே' படத்தில் அறிமுகமான நெப்போலியன், முதல் படத்திலியே இவரின் நடிப்பு திறமையின் மூலம் மக்களை கவர்ந்தார். கிராமத்து மண்வாசனை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வரும் திறமையை உடையவர்.
ரஜினி கதாநாயகனாக நடித்த 'எஜமான்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவர் நடிப்பை பார்த்து உண்மையான வில்லன் என்று பலர் இவரை பார்த்து பயந்த கதை உண்டு.
மேலும், இவர் வில்லனாக நடித்ததால் இவரது மனைவியும் இவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று கூறினாராம். எஜமான் திரைப்படத்தில் குழந்தையை கலைக்கும் காட்சியை பார்த்து, "கருவில் இருக்கும் குழந்தையை கலைக்க நினைப்பவரை கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்களா" என்று கேட்டாராம் இவரது மனைவி. இதனால் நெப்போலியன் அதிர்ச்சி அடைந்தார் என்று திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.