மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படப்பிடிப்பின் போது கதறி அழுத ஜெனிலியா.? கதாநாயகன் செய்த வேலை.! அதிர்ச்சியடைந்த படக்குழுவினர்..
கோலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் சங்கர். இவர் இயக்கும் படங்கள் எல்லாமே பட்ஜெட் அதிகமாக தான் இருக்கும். மேலும் பல ஹிட் திரைப்படங்களை.தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.
இந்த நிலையில் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பாய்ஸ்'. படத்தில் சித்தார்த், ஜெனிலியா, நகுல், போன்ற பல பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். சித்தார்த் மற்றும் ஜெனிலியாவிற்கு முதல் படம் 'பாய்ஸ்' தான்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து சித்தார்த் பேட்டியில் பேசினார். அவர், "ஜெனிலியாவிற்கு தமிழில் இது தான் முதல் படம். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் நான் தான் தினமும் டயலாக் சொல்லி கொடுப்பேன்.
இவ்வாறு ஒரு நாள் இரண்டு பக்க டயலாக் பேப்பரை ஜெனிலியாவிடம் துணை இயக்குநர் கொடுத்துட்டு போய்ட்டார். இதை பார்த்த ஜெனிலியா அழ ஆரம்பித்துவிட்டார். பின்பு நான் தான் சமாதானப்படுத்தி அவருக்கு டயலாக் சொல்லி கொடுத்தேன்" என்று கூறினார்.