சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
உங்கப்பா மாதிரி நீ இல்ல., சினிமாவா விட்டு போயிடுன்னு சொன்னாங்க - சினிமா பயணம் குறித்து மனந்திறந்த பிரபல நடிகர்..!!

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் திரைக்கு வந்த சீதாராமன் படத்தின் மூலம் திறமையான நடிகர் என்ற பெயரினை பெற்றார். ஆனால் துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் சில மலையாள படங்கள் சரியாக போகாதால் கேலி மற்றும் அவமதிப்புகளை சந்தித்ததாக கூறியுள்ளார்.
இது குறித்த அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். எனக்கு நடிக்க தெரியவில்லை என்றும், சினிமாவை விட்டு வெளியேறும்படியும் பலரும் விமர்சித்தனர். எனது தந்தை மம்மூட்டியை போன்று என்னால் சினிமாவில் நிலைக்க முடியாது என்று பேசினார்.
இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் என்னை நம்பி நான் கடுமையாக உழைத்தேன். அதுதான் இந்த இடத்திற்கு தற்போது என்னை அழைத்து வந்துள்ளது" என்று கூறியுள்ளார்.