திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சிவகார்த்திகேயன் மாதிரி என்னால் இருக்க முடியவில்லை" பிரபல நடிகரின் பரபரப்பான பேட்டி.!?
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பிரபலமானவர் சிவகார்த்திகேயன். தனது பேச்சுத் திறமையால் சின்னத்திரையில் இருக்கும்போதே குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தார். முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.
பின்னர் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயன், தமிழில் முதன்முதலில் 'மெரினா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவரின் நடிப்பு திறமை பாராட்டைப் பெற்றது. இதன் பின்னர் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை அடைந்தது. ஆனால் இதன் பின்னர் வெளியான திரைப்படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை என்பதால், சிவகார்த்திகேயன் தொடர்ந்து சினிமாவில் வெற்றி படங்களை கொடுப்பதற்கு போராடி வருகிறார். தற்போது கமலஹாசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில் விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளரும், நடிகருமான ஜெகன், "சிவகார்த்திகேயன் முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் என்னால் அவரை மாதிரி இருக்க முடியவில்லை என்பதால் தான் நான் இப்படி இருக்கிறேன்" என்று சோகத்துடன் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.