"நாங்களும் தான் பிசுக்கப்பட்டோம்" - நடிகர் கருணாஸ் ஆவேசம்.. பரபரப்பு பதில்.!



Actor Karunas about Tamil Cinema Industry Caste Issue 

 

தமிழ் திரையுலகில் காமெடி நட்சத்திரமாக வலம்வந்த நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனத்தலைவர் ஆவார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் மக்கள் பணியாற்றி இருக்கிறார். 

நடிகர் கருணாஸ் பொது மேடைகளில் ஆக்ரோஷமாக பேசும் தன்மை கொண்டவர் ஆவார். இவரின் பேச்சுக்கள் முந்தைய காலங்களில் சில சர்ச்சையில் சிக்கி இருந்தது. இந்நிலையில், அவர் தமிழ் திரைப்படத்துறையின் தற்போதைய நிலை குறித்து பேசியுள்ளார். 

இதையும் படிங்க: கஸ்தூரியின் வீட்டை சுத்துப்போட்ட வெள்ளம்; கலாயில் தொடங்கி கலவரத்தில் முடிந்த ட்விட்.. ஆபாச அர்ச்சனை.! 

ஜாதிப்பெருமை படங்கள்

இதுதொடர்பாக அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், "கதையே என் ஜாதிக்கதையே எடுக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சமீபகாலமாக என்ன நடக்கிறது?. அவனவன் ஜாதி பெருமை, நசுக்கப்பட்டோம், பிசுக்கப்பட்டோம், ஒடுக்கப்பட்டோம் என படம் எடுக்கிறார்கள். ஒருத்தர் நாடக காதல் என படம் எடுக்கிறார். 

karunas

இங்கு யார் தான் ஒதுக்கப்படவில்லை, பிசுக்கப்படவில்லை. எனது அப்பா மும்பையில் தாஜ் ஹோட்டலா வைத்திருந்தார்?. சாதாரண சாலையில், பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்ட சாலையோரம் இருந்த இடத்தில், கீத்துக்கொட்டாய் அமைத்து இருந்தார். 

அன்று எனது குடும்பத்தின் ஏழ்மை நிலை

அந்த கீத்துக்கொட்டாய் தென்னை மரத்துடன் இணைந்து இருக்கும். தென்னை மரத்தில் மழைக்காலத்தில் நீர் வந்தால், அது வெளியேற வீட்டிற்குள்ளேயே வாய்க்கால் இருந்தது. அதில் கரி, சாணித்தரை போட்டுத்தான் எங்களை வறுமையில் வளர்த்து ஆளாக்கினார். 

யார் இங்கு கஷ்டப்படவில்லை? எல்லோரும் கஷ்டப்பட்டுதான் வந்துள்ளார்கள். நாங்களும் தான் பிசுக்கப்பட்டோம். ஒன்று வாய்ப்பு கிடைக்க வேண்டும், இல்லையேல் உருவாக்கப்பட வேண்டும். நான் உருவாக்க தெரிந்தவன், அதனால் எவனைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை" என பேசினார்.
 

இதையும் படிங்க: "மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!