கஸ்தூரியின் வீட்டை சுத்துப்போட்ட வெள்ளம்; கலாயில் தொடங்கி கலவரத்தில் முடிந்த ட்விட்.. ஆபாச அர்ச்சனை.! 



Actress Kasturi text Abused by Netizens in X Platform 

 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர - சென்னை இடையே கரையை கடந்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து, அதன் எதிரொலியாக சென்னை நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் தாழ்வான இடங்களில் தேங்கிய நீர் விரைந்து படிப்படியாக வெளியேற்றப்பட்டு வந்தது. 

போர்க்கால அடிப்படையில் நடந்த பணிகள்:
இதற்காக தூய்மை பணியாளர்களும் வெளியூர்களில் இருந்து தற்காலிக பணிக்காக அதிகளவில் அழைத்து வரப்பட்டு இருந்தனர். இதனிடையே, நடிகை கஸ்தூரியின் வீடும் வெள்ளத்தில் நீரில் மூழ்கிய நிலையில், அக்.16ம் தேதி வரை வெள்ளநீர் வடியவில்லை என கூறப்படுகிறது. அப்போது, எக்ஸ் பயனர் ஒருவர் தனது ட்விட்டில், "மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்...." என தனது கருத்தை பதிவிட்டு இருந்தார். 

இதையும் படிங்க: வீட்டைச்சுற்றி தேங்கிய வெள்ளம்.. வெளியேறிய நடிகர் ஸ்ரீமன்..! 

நடிகை கஸ்தூரி ட்விட்

இந்த கருத்தை மேற்கோளிட்ட நடிகை கஸ்தூரி, "ரோம் நகரம்  எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது.  எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல. உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா  டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்" என அக்.16 காலை 09:15 மணியளவில் ட்விட் பதிவு செய்திருந்தார். அவர் இப்பதிவில் அரசையோ அல்லது தனிப்பட்ட நபரையோ என யாரையும் குறைசொல்லவில்லை. 

பதிலடி கொடுத்த கஸ்தூரி

இந்த பதிவுக்கு ஒரு பதிவர், "பொய் சொல்லாத தாய் கிழவி., உங்க வீட்டு முன்னாடி தான் நிக்கிறேன் 😂 ஒரு சொட்டு தண்ணி இல்ல" என கூறி இருந்தார். அவர் தன்னை நடிகை கஸ்தூரியின் வீட்டருகே இருப்பதாக ட்விட்டில் பேசி இருக்கிறார். இதனால் நடிகை கஸ்தூரி, தனது வீட்டில் நீர் இருக்கும் புகைப்படத்தை எடுத்து, "பொய் சொல்லி பிழைக்கும் பொதுப்பயலே. நீ என்ன ரோட்டுல நின்னு திறமையா வீடியோ எடுத்தாலும் உள்ளே தேங்கின தண்ணிய மறைக்க முடியலையே. எங்கே, என் வீட்டுக்கு கால் நனையாமல் வந்துரு பார்ப்போம்?  உன் புரட்டை நம்பி வீடியோவெல்லாம் விட்டவங்க மானத்தை வாங்கிட்டயே தி.பயலே.  

ஆபாச அர்ச்சனை

நேற்று 16 oct 3 மணி அளவில் என் வீட்டு நிலமை. பொய்யை பரப்பி கொக்கரித்த ப்ரோக்கர் பயலுகளுக்கும் மழை ரசிகைக்கும் 200 ரூபாய்க்கு மொத்தத்தையும் அடகு வைத்த திராவிடிய கும்பலுக்கும் சமர்ப்பணம்" என தெரிவித்து இருந்தார். இதனால் ஆவேசமடைந்த சிலர், நடிகை கஸ்தூரியை பலவிதமாக அவதூறு பேசி வசைபாட தொடங்கினர். இதனால் ஆவேசமான நடிகை, அந்த ட்விட்களையெல்லாம் புகைப்படம் எடுத்து பதிவு செய்து வருகிறார். 

தனது வீட்டில் கடந்த அக்.16 நீர் தேங்கியதாக நடிகை கூறிய பதிவும், அதற்கு வந்த பதில் பதிவும்

நடிகை கஸ்தூரியை ஆபாசமாக பேசி அவதூறு செய்யும் நபர்கள்

இதையும் படிங்க: "மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!