"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!



Director Pa Ranjith Condemn on Samsung Workers Protest Arrest in Sunguvarchatram 

 

சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் 1000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, சிஐடி அங்கீகாரம் உட்பட 14 அம்ச கோரிக்கைகயை முன்வைத்து கடந்த 30 நாட்களுக்கு மேலாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிங்க: #Breaking: த.வெ.க முதல் மாநாடு: "இராணுவ கட்டுப்பாடு" - விஜய் பரபரப்பு அறிக்கை... கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.!

தொடரும் போராட்டம்

கடந்த 3 நாட்களுக்கு முன்பில் இருந்து அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சிஐடி கோரிக்கை மட்டும் தற்போது வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் பிற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் கட்டாயம் அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா கோரிக்கை விடுத்தார். 

போராட்டக்காரர்கள் கைது

ஆனால், தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருப்பதால், அவர்கள் பந்தல் அமைத்து நடத்தி வந்த போராட்டத்திற்கான இடம் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், பந்தலும் நேற்றே காவல்துறையினரால் அகப்பற்றப்பட்டது. இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

பா. ரஞ்சித் கண்டனம்

இந்நிலையில், திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளபதிவில், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 

தொழிலாளர்களை போராட விடு

தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.  தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.  தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!!" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!